மெடிக்ளைம் பாலிசி வெட்டிச் செலவா?
மெடிக்ளைம் பாலிசி எடுக்க யாரும் அக்கறை கொள்வது கிடையாது. காரணம் அதில் முதிர்வு தொகை வராது என்பதே பலரது கருத்து. எதிர்பாராமல் ஏற்படும் பெரும் மருத்துவ செலவை ஈடுகட்டும் பாலிசியே மெடிக்ளைம் பாலிசி. இந்த பாலிசியின் மூலம் விபத்து, அறுவை சிகிச்சை போன்றவற்றின் செலவை ஈடுகட்ட முடியும்.
பெண்களுக்கு 18 வயதாகும் போதே மெடிக்ளைம் பாலிசி எடுத்து வைத்திருந்தால் குழந்தைப்பேறு, கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் போது அந்த செலவை ஈடுகட்ட உதவும். உடலில் உள்ள நோய்களை மறைத்து மெடிக்ளைம் பாலிசி எடுப்பது தவறான செயலாகும். இதனால் பின்னர் சிகிச்சை பெறும் போது க்ளைம் செய்வதில் சிக்கல் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.