பயனாளர்களுக்காக புதிய அம்சங்கள், தொழிநுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி அடுத்தகட்டமாக அனுப்பிய செய்திகளை(மெசேஜ்களை) எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.
அடுத்தகட்டமாக நிலைத்தகவலில்(status) ஏதேனும் செய்தி அல்லது இணையப் பக்கத்திற்கான இணைப்பை(லிங்க்) பதிவு செய்யும்போது அதற்கான முன்னோட்டத்தையும்(preview) காணும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
மேலும் தற்போது வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய செய்திகளை(மெசேஜ்களை) எடிட் செய்யும் வசதியையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இதனால் அனுப்பப்படுகிற செய்திகளில் பிழை இருந்தால் அதை நீக்காமலே(டெலிட்) எடிட் மூலம் சரிசெய்யலாம்.இந்த வசதி பீட்டா பயனர்களுக்கு முதலில் வழங்கப்பட்டுள்ளது. சோதனைக்குப்பின், அனைத்து ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் அறிமுகமாகும்.