கொரோனா ஊரடங்கு காலத் தில் வங்கிக்கடன்களை திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு வங்கிகள் வட்டிக்கு வட்டி விதித்து வாடிக்கையாளர்களை கலங்கச்செய்தது. இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு வட்டிக்கு வட்டி வசூலிப்பதை தடை செய்ய சொல்லி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து கடன் பெற்றவர் களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி சிறு, குறு தொழில் நிறுவன கடன், கல்விக்கடன்கள், வீட்டுகடன், வீட்டு உபயோக பொருட்கள் கடன், கிரெடிட் கார்டு நிலுவை, வாகன கடன், தனிநபர் கடன் மற்றும் பிற தேவைக்கான கடன் ஆகியவற்றுக்கு மட்டுமே வட்டிச்சலுகை பொருந்தும் என அறிவித்துள்ளது. விவசாயக் கடன்களுக்கு இச்சலுகை கிடையாது.
கொரோனா ஊரடங்கு காலத்திலும் வழக்கம்போல் அனைத்து மாதங்களிலும் தவணைத் தொகை யை தவறாமல் செலுத்திய வர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களு க்கு கூட்டு வட்டிக்கு இணையான தொகை கேஷ்பேக்காக பிரித்து தரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கு 6200 கோடி கூடுதல் செலவாகும்.