அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1,05,155 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. வரியாக ரூ.19,193 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. வரியாக ரூ.5,411 கோடியும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரியாக ரூ.52,540 கோடியும் வசூலாகியுள்ளது. இதில் செஸ் ரூ.8,011 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அக்.31-ம் தேதி வரை 80 லட்சம் பேர் ஜி.எஸ்.டி. ரிட்டனை தாக்கல் செய்துள்ளனர். கொரோனாவால் முடங்கியிருந்த பொருளாதாரம் மீண்டெழுவதையே இது காட்டுகிறது.