2021&22 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-&22க்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :
- சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு 15,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைக் காக்க இணையதளம் ஒன்று தொடங்கப்படவுள்ளது.
- அனைத்துத் துறைகளிலும் மகளிர் இரவு நேரப் பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
- 100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன.
- மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 750 புதிய ஏகலைவா பள்ளிகள்.
- அடுத்த 6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ -மாணவியருக்கு உதவும் வகையில் 35,219 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- ஆதிதிராவிட மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பிந்தைய கல்விக்கான திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம்.
- தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.50,000 கோடி ஒதுக்கீடு.
- இந்திய விண்வெளித் துறையின் கீழ் புதிய பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா துவக்கப்படவுள்ளது. இதன் வாயிலாக பிஎஸ்எல்வி சிஎஸ்51 செலுத்து வாகனம் உருவாக்கப்படவுள்ளது.
- 2021-ம் ஆண்டு டிசம்பரில் ஆளில்லா விண்வெளி ஓடம் ககன்யான் செலுத்தப்படவுள்ளது.
- தனிநபர் வருமான உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை
- சுயச்சார்பு திட்டத்திற்கு ரூ.64,810 கோடி ஒதுக்கீடு
- மதுரை முதல் கொல்லம் வரை அதிநவீன வசதிகளுடன் கூடிய சாலை அமைக்க முடிவு
- நாடு முழுவதும் போக்குவரத்து வசதியை மேம்படுத்த ரூ.18 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
- நாடு முழுவதும் போக்குவரத்து வசதியை மேம்படுத்த ரூ.18 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
- பொதுத்துறை வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்க ரூ.20,000 கோடி
- டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்
- தமிழகத்தில் 3500 கி.மீ நீள சாலைகள் அமைக்க ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு
- கொரோனா தடுப்பூசி திட்டத்துக்காக இந்த ஆண்டு ரூ. 35000 கோடி ஒதுக்கீடு.
- தங்கம் இறக்குமதிக்கு வரி குறைக்கப்படும்
- பெட்ரோலிய பொருட்கள் மீதான செஸ் வரி விதிப்பு
- சென்னை & சேலம் எட்டு வழி சாலை அமைப்பதற்கான டெண்டர் இந்த நிதியாண்டில் செயல்படுத்தப்படும்
- பழைய வாகனங்களை அகற்றி புதிய வாகனங்கள் அதிகரிக்க முடிவு.
- கிராமப்புற கட்டமைப்பை உருவாக்க மற்றும் மேம்படுத்த ரூ.40,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- தமிழகத்தில் கடலோர பூங்கா அமைக்கப்படும்
- நெசவு தொழிலை மேம்படுத்த மூன்றாண்டுகளில் 7 ஜவுளி பூங்கா அமைக்க திட்டம்
- 500 நகரங்களில் குடி நீர் வளங்கள் திட்டத்திற்கு 2.87 ரூபாய் கோடி ஒதுக்கீடு
- இந்தியா முழுக்க 46 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள ரயில் பாதை மின்மயமாக்கல் திட்டம்
- மேலும் ஒரு கோடி குடும்பங்களுக்கு கேஸ் இணைப்பு, திட்டத்தை செயல்படுத்த 2.217 கோடி ரூபாய் ஒதுக்கீடு