முதலீட்டாளர்களுக்கு செபியின் புது ‘லாக்’
மல்ட்டிகேப் பண்டுகளில் முதலீடானது பெரிய, நடுத்தர, சிறிய நிறுவனங்களில் பிரித்து செய்யப்படுகிறது. இதில் எந்த பிரிவுகளில் எவ்வளவு சதவிகிதம் முதலீடு செய்யலாம் என்பது குறித்து கட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. இந்நிலையில் செபியின் புதிய கட்டுப்பாட்டால் மல்டிகேப் பண்டுகளின் முதலீடானது பெரிய. நடுத்தர, சிறிய நிறுவனங்களில் தலா 25 சதவீத முதலீட்டையும், மீதமுள்ள முதலீட்டை பண்டு மேலாளரின் முடிவின்படியும் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இதனால் பெரிய நிறுவனங்களின் முதலீட்டை விற்று சிறிய நிறுவனங்களில் முதலீடு மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக, “புதிய விதியை மேற்கொள்ளும் மியூச்சுவல் பண்டுகள் மல்டிகேப் பண்டுகள் என்றும், பழைய முறையை மேற்கொள்ளும் மியூச்சுவல் பண்டுகள் ப்ளெக்ஸிகேப் பண்டுகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்” என செபி அறிவுறுத்தியுள்ளது.