போலி ஜிஎஸ்டி பில்-லை கண்டுபிடிப்பது எப்படி..?
போலி ஜிஎஸ்டி பில்கள் மூலம் பல கோடி பணம் மோசடி செய்த செய்திகள் இணையத்தில் பரவலாக உள்ளது. நீங்கள் வாங்கும் பொருட்களுக்கான GST பில்லில் உங்களுக்கு சந்தேகம் இருந்தாலோ அல்லது அந்நிறுவனத்தின் GST பில் உண்மையானதா என கண்டறிய விரும்பினால் கீழே கூறப்படும் தகவல்கள் மூலம் சரிபார்க்கலாம்.
- முதலில் கொடுக்கப்பட்ட 15 இலக்க GSTIN எண் சரியானதா என பார்க்க https://www.gst.gov.in போர்டலுக்குச் சென்று 15 இலக்க நம்பரை உள்ளிட்டாலே கண்டுபிடித்து விடலாம்.
- அதன்பின் இன்வாய்ஸ் அல்லது ரசீது எண் மற்றும் தேதியை சரிபார்க்க வேண்டும்.
- நீங்கள் செலுத்த வேண்டியதாக அந்த பில்லில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை மற்றும் வரிகள் சரியானதா என செக் செய்ய வேண்டும்.
- அதனையடுத்து HSN/SAC code-களையும் ஜிஎஸ்டி போர்ட்டல் மூலம் சரியான ஒன்றா எனக் கண்டறியலாம்.
- இறுதியாக சப்ளையரின் கையொப்பம் மற்றும் ஜிஎஸ்டி வரிகள் சரியானதா என்பது குறித்து ஜிஎஸ்டி போர்ட்டலுக்குச் சென்று உள்ளீடு செய்து பார்க்கலாம்