சர்வதேச அளவில் மின்னணுப் பொருட்களை விற்பனை செய்யும் ஜப்பானிய நிறுவனமான நிக்கான் (Nikon) ஆகும். ஒளியியல் மற்றும் இமேஜிங் தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற இந்நிறுவனம். தனது இசட்-மவுண்ட் மிரர்லெஸ் கேமரா (Z-mount mirrorless camera) வரிசையில் புதிய லென்ஸ்களுடன், நிக்கான் தனது மல்டி-கேமரா தொழில்முறை ரிமோட் ஷூட்டிங் கன்ட்ரோலர் சிஸ்டமான (multi-camera professional remote shooting controller system) NX ஃபீல்டையும் அறிமுகம் செய்துள்ளது.
இது ஒளிபரப்பாளர்கள் பல கேமரா அமைப்புகளை தொலைவிலிருந்து கட்டுப்படுத்த அனுமதிக்கும், மேலும் ஒரே நேரத்தில் FTP சர்வர்களுக்கு ஆட்டோமேட்டிக் ஃபைல் அப்லோட்ஸ்களை கையாளும். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரு நிலையான குவிய நீள லென்ஸ்கள் (fixed focal length lenses) Nikkor Z 50mm F2.8 மற்றும் 105mm F2.8 VR S ஆகியவை ஆகும். டெவலப்மென்ட் ஸ்டேஜில் இருக்கும் Nikkor Z 28mm F2.8 மற்றும் 40mm F2 லென்ஸ்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த 2 புதிய லென்ஸ்களும் மொத்த நிகான் இசட்-மவுண்ட் போர்ட்ஃபோலியோவை 18 லென்ஸ்கள் மற்றும் இரண்டு டெலிகான்வெர்ட்டர்கள் வரம்பில் கொண்டு வருகின்றன. Nikon Z MC 50mm F2.8-ன் விலை ரூ.58,995, 105mm F2.8 VR S-ன் விலை விலை ரூ.89,995 ஆகும்.