அதிக இன்சூரன்ஸ் எடுப்பது அந்த விஷயத்திற்குத்தானா?
குடும்பத்தின் பாதுகாப்பான எதிர்காலத்துக்காக பலரும் ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்கிறார்கள். காப்பீட்டுத் துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. காப்பீட்டில் மிகவும் பிரபலமான ULIP திட்டங்கள் இந்த ஆண்டும் அதிக நபர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ULIP ரீடெயில் வருடாந்திர பிரீமியம் 33% வளர்ச்சியடைந்துள்ளது.
பென்ஷன் முதலீடுகளுக்கு சமமாக, சேமிப்பில் (non-par சேமிப்புகள்) அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதில், பிரீமியம் தொகை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ஈக்விட்டி பங்கு சந்தைகள் வளர்ந்து வரும் அதே நேரத்தில், வசதியான நபர்கள் மற்றும் வைட்-காலர் பணிகளில் இருக்கும் இளைஞர்கள் பலரும் ULIP முதலீட்டையே விரும்புகிறார்கள்.
அடுத்ததாக, பென்ஷன் வழங்கும் இன்சூரன்ஸ் திட்டங்கள் அதிகப்படியான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. எதிர்காலத்தில் நிதி மற்றும் பொருளாதார ரீதியான பாதுகாப்புக்காக நிலையான வருமானம் வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது.
அதற்கு ஏற்றார் போல காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களும் மாதாந்திர பென்ஷன் வழங்கும் இன்சூரன்ஸ் திட்டங்களை ஆயுள் காப்பீட்டுடன் சேர்த்து வழங்கி வருகிறது. சமீபத்தில் பலரும் பென்ஷன் வழங்கும் காப்பீட்டு திட்டங்களை அதிகப்படியாக வாங்கி வருகின்றனர்.
கோவிட் தாக்கம் பரவலாக, மிடில்-கிளாஸ் மக்கள் மட்டுமல்லாமல், அப்பர்-கிளாஸ் மக்களின் சேமிக்கும் பழக்கத்தை பெரிதாக பாதித்துள்ளது. பண வசதி இருப்பவர்கள் இதனால் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், பார்டிசிபேட்டிங் முதலீடு போல இல்லையென்றாலும், பிரீமியம் குறைவு என்பதால், non-par savings இல் பலரும் சேமித்து வருகிறார்கள். ஆனால், நீண்ட கால இன்சூரன்ஸ் என்றால், பார்டிசிபேட்டிங் திட்டங்கள் தான் அதிக பயனுள்ளதாக இருக்கும்.
குரூப் டெர்ம் இன்ஷூரன்ஸ் ப்ரீமியத்திலும் கணிசமான வளர்ச்சி இருப்பதை அறிக்கை வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள், தங்களுடைய பிரபலமான பிராண்டுகளுடன், புதுமையான அணுகல் மற்றும் விநியோக நெட்வொர்க்குடன் தங்களின் சந்தை மதிப்பை அதிகரித்து வருகின்றனர்.