ஆதாரில் உங்கள் மொபைல் எண் தான் இணைக்கப்பட்டுள்ளதா?
போலி ஆதார் அட்டைகள் மூலம் மோசடிகள் நடைபெறுவதை தடுக்கும் விதத்தில் UIDAI எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில், ஆதார் கார்டுடன் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பரை இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள UIDAI அறிவுறுத்தியுள்ளது.
இதை ஆன்லைன் மூலம் உறுதிப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் மத்திய நிதியுதவி அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஆதார் கார்டுடன் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் இருந்தால்,
myaadhaar.uidai.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்
அதில், ‘Verify Mobile Number’ and ‘Verify Email Address’ என்பதில் உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்த பின் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்
தொடர்ந்து, மொபைல் நம்பர் அல்லது இமெயில் ஐடியை பதிவிட வேண்டும்.
இதையடுத்து, Captcha-வை டைப் செய்யுங்கள். அடுத்து, ‘Send OTP’ தேர்வு செய்யவும்.
இப்போது, OTP வரும் பட்சத்தில், ஆதாருடன் மொபைல் நம்பர் சரியாக லிங்க் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிந்திட முடியும். இதே முறையில் தான் OTP மூலம் இமெயில் ஐடியை உறுதிப்படுத்தி கொள்ளலாம்.