‘எம்.ஜி., மோட்டார் இந்தியா’ நிறுவனம், 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், இரண்டாவதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு வருகிறது.
இதற்காக குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தி வருகிறது.
தற்போது குஜராத்தில் ஒரு தொழிற்சாலை இயங்கி வரும் நிலையில் உற்பத்தி திறனை, அடுத்த ஆண்டு 1.25 லட்சமாக அதிகரிக்கவும், அத்துடன், 1.75 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் வகையிலும், இரண்டாவதாக ஓர் ஆலையை அமைத்து, மொத்த உற்பத்தியை, 3 லட்சமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
பல மாநில அரசுகள், ஆலை அமைக்க பல்வேறு சலுகைகளை வழங்க முன்வந்துள்ளதாக, நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர ராஜீவ் சாபா தெரிவித்தார்.
ஜூன் மாதத்துக்குள்ளாக, எந்த மாநிலத்தில் ஆலையை அமைப்பது என்பது முடிவு செய்யப்பட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், ஆலை உற்பத்திக்கு தயாராகிவிடும் என்றார் அவர்.