மொபைல் எண் இல்லா ஆதார் வேண்டுமா ?
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), மொபைல் எண்ணை பதிவு செய்யாதவர்களுக்காக இந்த நடைமுறையை கொண்டுள்ளது. இதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
மொபைல் எண் இல்லாமல் ஆதாரை பதிவிறக்கம் செய்ய UIDAIயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ‘My Aadhaar’ என்பதை தேர்வு செய்யவும். பின்னர் ‘ஆர்டர் ஆதார் பிவிசி கார்டு’ என்பதைக் கிளிக் செய்து உங்களது12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
எனது மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை’ என்ற விருப்பத்தை கிளிக் செய்து உங்கள் மாற்று எண் அல்லது பதிவு செய்யப்படாத மொபைல் எண்ணை உள்ளிடவும். பின்னர் மொபைல் எண்ணிற்கு வரும் கடவுச்சொல்லை பதிவிட்டு இறுதியாக ‘சமர்ப்பி’ என்பதை தேர்வு செய்யவும்.
இதன் பின்னர், ஆதார் கடிதத்தின் முன்னோட்டம் என்பதை காண்பீர்கள். இதனையடுத்து பணம் செலுத்த வேண்டும்.
பணம் செலுத்திய பின் மொபைல் எண் இல்லாத ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.