வங்கி் வாடிக்கையாளர்களே அலர்ட்!
தற்போது பணபரிவர்த்தனை முற்றிலுமாக ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு ஒருவிதத்தில் உதவியாக இருந்தாலும், சில மோசடி கும்பல்களால் ஆன்லைன் மூலம் பணத்தை திருடிவிடுகின்றனர்.
அதிகரித்து வரும் ஆன்லைன் பண மோசடி குறித்து மத்திய அரசின் கீழ் செயல்படும் PIB சார்பாக நடத்தப்பட்ட சரிபார்ப்பில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்களுக்கு வங்கியிலிருந்து வந்தது போலவே போலியான குறுஞ்செய்திகளை மோசடியாளர்களிடமிருந்து வந்துள்ளது.
இந்த குறுஞ்செய்தியில் தங்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் வங்கி கணக்கினை தொடர உங்களது வங்கி விபரங்கள் முழுமையாகவும் அளிக்கவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கி வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணம் திருடப்படுகின்றது.
ஆகையால், இதுபோன்ற போலியான குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசின் கீழ் செயல்படும் PIB அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இது போன்ற மோசடி கண்டறியப்பட்டால் வாடிக்கையாளர்கள் report.phishing@sbi.co.in என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.