டெபிட், கிரெடிட் அட்டையில் இருக்கும் புதிய அபாயம்
தற்போது டெபிட் கார்டு அல்லது கடன் அட்டை வைத்துள்ள வாடிக்கை யாளர்கள், அவர்கள் பணம் செலுத்தும் போது பின் நம்பர் உபயோகம் செய்யாமல் ரூ.2,000 வரை பரிவர்த்தனை செய்ய முடியும். இதன் உச்சவரம்பை கடந்த ஜனவரி 1 முதல் ரு.5,000 ஆக ரிசர்வ் வங்கி உயர்த்தியது.
வாடிக்கையாளர்கள் இந்த வசதி வேண்டி வங்கிகளில் தெரிவித்தால் மட்டுமே இதற்கு ஒப்புதல் நிறைவேற்றப்படும் எனவும், தற்போதைய காலகட்டத்தில் மக்கள் தங்களது பரிவர்த்தனைகளை எளிதாக செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கிலே இத்திட்டத்தை நிறைவேற்றியதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.
சமீபகாலமாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் வாடிக்கையாளர் ஒருவர் தனது கிரெடிட் கார்டை தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருக்கும் போது, மற்றொருவர் அவர் அருகிலேயே நெருக்கமாக சென்று தனது ஸ்வைப் மெஷினில் எளிதாக தனது அக்கவுண்ட்டுக்கு பரிவர்த்தனை செய்வதாக இருக்கிறது. இப்படியும் வாடிக்கையாளர்கள் பணம் டிஜிட்டல் முறையில் திருடு போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே பின் நம்பர் இல்லாமல் பணபரிவர்த்தனை குறித்து அதிக கவனம் கொள்ள வேண்டும்.