சொத்து மீதான கூடுதல் கடனுக்கு பதிவு செய்யத் தேவையில்லை! முதல்வர் அறிவிப்பு
தொழில்முனைவோர் தங்களது சொத்துகளை அடமானமாகக் கொடுத்து கடன் பெறும்போது , அவற்றின் மீது கடன் பெற்றுள்ளதை உரிமைப் பத்திரம் ஒப்படைத்து ( எம்ஓடி ) சார் பதிவாளர் . அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர் .
அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது , சார் பதிவாளர் அலுவலகத்தில் திரும்பவும் பதிவு செய்ய ஒரு சொத்தின் மீது எத்தனை முறை கூடுதல் கடன் பெற்றாலும் , அத்தனை முறையும் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் . இதனால் , காலவிரயம் ஏற்படுவதுடன், கடன் பெறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது .
இந்த நடைமுறையை மாற்றி , அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது , மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை என்ற நடைமுறை கொண்டுவரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார் .