கிரெடிட் கார்டை ஸ்மார்ட்டாக பயன்படுத்த ‘நச்’ பாயிண்ட்ஸ்…
கிரெடிட் கார்டு ஒப்பந்தத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளுங்கள்
கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தம் மற்றும் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனை களை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். இதில் விதிக்கப்படும் பரிவர்த்தனைக் கட்டணங்கள், வட்டி விகிதங்கள் மற்றும் கடனுக்கான அதிகரித்த விகிதங்கள் எப்போது விதிக்கப்படும் என்பதைப் புரிந்துகொள்வது மிக முக்கியமாகும்.
கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதைத் தவிர்க்கவும்
ஸ்மார்ட் செலவுத் திட்டத்தை வைத்திருப்பதன் மூலம் இந்த வலையில் விழாமல் இருக்க உதவும். கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கப்பட்டவுடனே வட்டி போடுவதன் நேரம் தொடங்கிவிடும். மேலும், இதற்கான ஆண்டு வட்டி சுமார் 35 – 40 சதவிகிதமாக இருக்கும். தவிர, கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்க சுமார் ரூ.300 – ரூ.500 கட்டணம் வேறு செலுத்த வேண்டும் என்பதை மறக்கக் கூடாது.
அவசரகால நிதியை உருவாக்குதல் – மருத்துவச் சிகிச்சை மற்றும் எதிர்பாராத அவசரக் காலங் களில் கிரெடிட் கார்டுகள் நிச்சயமாக உதவும் என்று நம்மில் பெரும்பாலானோர் நம்புகிறோம். ஆனால், அதை ஒரு பொதுவான விதிமுறையாகக் கருதுவது விவேகமற்றச் செயலாகும். இதுபோன்ற எதிர்பாராத அவசரச் சூழ்நிலைகளுக்கு அவசரக் கால நிதியாக, குடும்ப மாதச் செலவைப் போல் 3 முதல் 6 மடங்கு தொகையைச் சேர்த்து வைத்திருப்பது, கிரெடிட் கார்டுக்கு ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். மேலும், இது கிரெடிட் கார்டு கடன்களில் சிக்குவதைத் தடுப்பதாக இருக்கும்.
கிரெடிட் கார்டு செலவை தீர்மானிக்க வேண்டும்
பணத்துக்குப் பதிலாக, கிரெடிட் கார்டுகளைப் பயன் படுத்துவது சரியானது. ஆனால், இதற்கு வாங்கக்கூடிய பொருள்களுக்குரிய தொகையைக் குறிப்பிட்ட கால இடை வெளியில் திரும்பச் செலுத்தக் கூடிய தகுதி இருக்க வேண்டும். ஒருவர் திரும்பச் செலுத்தக் கூடியதைவிட அதிகமாகச் செலவு செய்வது மிகவும் மோச மான செயலாகும். உங்கள் இந்த நடவடிக்கை உங்களைக் கடனில் சிக்கவைத்துவிடும்,
நிறைய கிரெடிட் கார்டுகள் தேவையில்லை
கிரெடிட் கார்டுகள் அவசரக் காலங்களில் கண்டிப்பாக உதவும். மேலும், பணம் செலுத்துவதை எளிதாக்கும் என்பது உண்மைதான். ஆனால், அதிகப்படியான கிரெடிட் கார்டு களை வைத்திருப்பது ஒருவரை அதிகமாகச் செலவழிக்கத் தூண்டக்கூடும். கிரெடிட் கார்டு கடன்களிலிருந்து மீள்வது கடினம். ஒரே ஒரு கிரெடிட் கார்டில் மட்டுமே வெகுமதி புள்ளிகளைப் பெறுவது சிறந்தது. இதன் மூலம் நீங்கள் அந்தப் புள்ளிகளை விரைவாகப் பணமாக்க முடியும்.
முழுப் பணத்தையும் செலுத்துங்கள்
கிரெடிட் கார்டை லாபகரமாகப் பயன்படுத்த மாதம் அல்லது அடுத்த பில்லிங் தேதிக்குள் முழுப் பணத்தையும் செலுத்த வேண்டும். திரும்பச் செலுத்து வதில் தாமதம் மற்றும் குறைந்தபட்ச தொகையைச் செலுத்தி வருவது, கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம் மற்றும் அதிக வட்டி கட்ட வேண்டி வரலாம்.
ஒருபோதும் கிரெடிட் கார்டை கடன் கொடுக்காதீர்கள்
கிரெடிட் கார்டை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்து வதற்கு முக்கியமாக, உங்கள் கிரெடிட் கார்டை மற்றவர்கள் கடன் வாங்கத் தராதீர்கள்; சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்துவதாக உறுதி அளித்தாலும் அவர்கள் மீது நம்பிக்கை வைக்காதீர்கள். அப்படி நம்பிக்கை வைப்பது விவேகமற்றச் செயலாகும்.
காரணம், கடன் மற்றும் கட்டணங் களுக்கு நீங்கள்தான் பொறுப்பாவீர்கள். கிரெடிட் கார்டைக் கடனாக வாங்கிப் பயன்படுத்தியவர்கள், கடனை திரும்பக் கட்டவில்லை எனில், நீங்கள்தான் பொறுப்பு. உங்களிடமிருந்து வாங்கிய பணத்தை அவர்கள் சரியாகத் திருப்பித் தரவில்லை எனில், நீங்கள் இரண்டு மடங்கு வட்டியுடன் அந்தக் கடனைத் திரும்பக் கட்ட வேண்டியிருக்கும் என்பதை மறக்கவே மறக்காதீர்கள்!