பிசினஸ் திருச்சி வாசகர் விமர்சனங்கள்…
தன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை, இந்தத் தலைப்பே என்னை இந்த விளம்பர கட்டுரையை வாசிக்க வைத்திருக்கிறது. ஒவ்வொரு தலைப்புகளும் ரசிக்கும் படியாக உள்ளது…
ரவிக்குமார் அரியமங்கலம்
பங்குச்சந்தையில் ஈடுபட ஆர்வம் என்ற கட்டுரை பங்குச்சந்தை பற்றிய விவரங்களை எடுத்துரைப்பதாக இருந்தது. மேலும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுகிறது.
அசோக், உய்யகொண்டன் திருமலை
வணிகம் பழகு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வெற்றியை காட்டும் காட்சியாக இருப்பதால் தன்னம்பிக்கை ஏற்படுகிறது, பிசினஸ் திருச்சி முழுக்க முழுக்க பிசினஸ் சார்ந்த திருச்சியாக இருக்கிறது.
பூபாலன், காஜா நகர்
விளம்பர கட்டுரைகள் நிறைய, சிறிய செய்திகள் பல, வணிக கட்டுரைகள், விளம்பரங்கள், திருச்சி சார்ந்த வணிகச் செய்தி, இது மட்டுமல்லாது வணிகத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகளின் பிஸ்னஸ் முகத்தை வெளிப்படுத்துவது என்று பிசினஸ் திருச்சியின் ஒவ்வொரு பக்கமும் பல்வேறு தகவல்கள்… வாழ்க
ராஜேந்திரன், உறையூர்
சில்லறை விற்பனையில் சாதனை புரிந்த அண்ணாச்சி என்ற செய்தியைப் படித்தேன், எளிய வியாபாரிகள் சாமானிய மக்களுக்கான வியாபாரத்தில் நடிக்கின்றனர், அண்ணாச்சி கடைகள் எந்த அளவுக்கு வலுப்பெறுகின்றனவோ அந்தளவிற்கு எளிய மக்களுக்கான வளர்ச்சியும் இருக்கும்.
விஷ்வா, அல்லிதுறை