தொழில்நுட்ப ஆடை தயாரிப்பில் இந்தியா முன்னணி வகிக்க ரூ.1,480 கோடி..!
குண்டு துளைக்காத ஜாக்கெட், தீப்பற்றாத உடை, விண்வெளி வீரர் கள் அணியும் உடை, விளையாட்டு வீரர்களின் உடைகள், சில துறைகளின் ஊழியர்களுக்கு தேவை யான சிறப்பு உடைகள் உள்ளிட்ட தொழில்நுட்ப ஆடை தயாரிப்பில், இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும் என்ற நோக்கில், ரூ.1,480 கோடி மதிப்பில், தேசிய தொழில் நுட்ப ஆடைகள் திட்டத்தைத் தொடங்க பொருளாதார விவகாரங் களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.
அதன்படி கம்பெனி கள் சட்டம் மற்றும் அமைப்பு பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்த ஏற்றுமதி சங்கங்களும், வர்த்தக அமைப்புகளும், தொழில் நுட்ப ஆடைகளுக்கான பிரத்யேக வளர்ச்சிக் குழு அமைப்பதற்கான திட்டங்களை மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளன.