திருச்சி கிரிஷ் ஹவுசிங் புரமோட்டர்ஸ் நிறுவனம் சார்பில் விற்பனை விரிவாக்க ஆலோசனை கூட்டம்!
திருச்சி உறையூர் ராமலிங்க நகரில் உள்ளது கிரிஷ் ஹவுசிங் புரமோட்டர்ஸ். இந்நிறுவனம் திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைய உள்ள பஞ்சப்பூர் பகுதியில் ஆனந்தம் நகர், ட்ரீம் சிட்டி, ஆண்டான் நகர் ஆகிய வீட்டுமனைகளை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆனந்தம் நகர் வீட்டுமனைகளை விற்பனை செய்வதற்கான ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிலாஸம்ஸ் ஹோட்டலில் (16/06/2022) இன்று மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.
கிரிஷ் ஹவுசிங் புரமோட்டர்ஸின் துணைத்தலைவர் D.S.முத்துகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பிரவீன் குமார், துணைத் தலைவர்கள் D. சந்திரமோகன் மற்றும் A. சந்திரன் ஆகியோர் பங்கேற்று ஆனந்தம் நகர் மனைகளை விற்பனையை மேம்படுத்துவது குறித்து பணியாளர்கள் மற்றும் விற்பனை முகவர்களுக்கான பல்வேறு பயனுள்ள ஆலோசனைகளாக வாடிக்கையாளரிடம் பேசும் முறை மற்றும் மனையின் சிறப்பம்சங்கள் ஆகியவற்றை எடுத்துரைத்தும், ஆனந்தம் நகர் மனைகள் விற்பனையை அதிகரிப்பது குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.
மேலும் வருகின்ற (19/06/2022) ஞாயிற்றுக்கிழமை அன்று ஆனந்தம் நகர் மனையை பார்வையிட சிறப்பு முகாமினை ஏற்பாடு செய்துள்ளனர். மனை வாங்க விரும்புவோர் மற்றும் மனையை பார்வையிட விரும்புவோருக்கு இலவச வாகன வசதி செய்து தருகின்றனர்.
இதுகுறித்து மேலும் கூடுதல் விபரங்கள் அறிந்து கொள்ள விரும்புவோர் 8681011001, 8124611001 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.