எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு தொலைந்து போனால்?
உங்களது கிரெடிட் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டு விட்டாலோ அதை உடனடியாக பிளாக் செய்ய வேண்டும். அதற்கு நான்கு வழிகள் உள்ளன.
1) 39020202 என்ற எண்ணுக்கு அழைத்து உங்கள் தொலைந்து போன கிரெடிட் கார்டை நீங்கள் பிளாக் செய்யலாம்.
2) எஸ்.எம்.எஸ் மூலம் பிளாக் செய்ய “BLOCK XXXX” என்று டைப் செய்து 5676791 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இந்த XXXX என்பது உங்களது கிரெடிட் கார்டின் கடைசி நான்கு இலக்கங்கள்.
3) வெப்சைட் மூலம் பிளாக் செய்ய sbicard.com என்ற முகவரியில் சென்று ‘Requests tab’ என்ற பிரிவின் கீழ்‘Report Lost/Stolen Card’என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களது கார்டு நம்பரை கிளிக் செய்து பிளாக் செய்யலாம்.
4) மொபைல் ஆப் மூலம் பிளாக் செய்வதற்கு, எஸ்.பி.ஐ. ஆப்பில் ‘menu’ என்ற பிரிவின் கீழ் ‘Service Request’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில்‘Report Lost/Stolen’என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உங்களது கிரெடிட் கார்டு எண்ணை தேர்ந்தெடுத்து ‘submit’ கொடுக்க வேண்டும்.