சுயஉதவிக் குழுக்கள் வெற்றி பெற..!
பெரும்பாலான மகளிர் சுயஉதவி குழுக்கள் கடன் வாங்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. சேமிப்பு இல்லாததால் கடன்தாரர்களாகவே உள்ளனர். முதலாளி ஆக முடிவதில்லை. சேமிப்பின் அவசியம் உணர்ந்து செயல்பட்டால் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு மிக குறைந்த வட்டியில் கடனுதவி அளிக்கும் நிலை உருவாகும். மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் வாங்கி சிக்கிக் கொள்ளும் அவஸ்தை இராது.
அரசின் கண்காணிப்புடன் செயல்படும் சுயஉதவிக் குழுக்கள் அரசு உதவி பெற்று வெற்றி இலக்கை எளிதாக அடையலாம். குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பல்வேறு தொழில்களை சுழற்சி முறையில் மேற்கொள்ள வேண்டும்.
தொழிலை தொடங்கும் குழுக்களுக்கு சந்தைப்படுத்தல் குறித்த தெளிவு, முறையான பயிற்சி, தொழில் சார்ந்த ஆலோசனைகள், சரியாக திட்டமிடல், தளராக நம்பிக்கை கொண்டிருந்தால் சுயஉதவி குழுக்களின் திட்டம் வெற்றி அடையும் என்கிறார் தன்னார்வ தொண்டில் சிறந்து விளங்கும் எஸ்.சியாமளா.