வெற்றிக்கான சாக்ரடீஸ் தத்துவம்..!
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சாக்ரடீஸிடம், “வாழ்க்கையில் வெற்றி பெற எது சிறந்த வழி” என்று ஒரு இளைஞன் கேள்வி எழுப்பினான். அந்த இளைஞனை உற்று நோக்கிய சாக்ரடீஸ் திடீரென அவன் கழுத்தை பிடித்து தண்ணீருக்குள் அமிழ்த்தினார். மூச்சுத் திணறிய அந்த இளைஞன், சாக்ரடீஸின் கையை தட்டிவிட்டு தண்ணீருக்குள்ளிருந்து திமிரியபடி வெளியே வந்து மூச்சுவிட்டான்.
இப்போது சாக்ரடீஸ் அவனிடம், “நீ தண்ணீருக்குள் மூழ்கி இருந்த போது என்னவெல்லாம் நினைத்தாய்” என கேட்டார். “எப்படியாவது தண்ணீரிலிருந்து வெளியே வர வேண்டும் என்ற ஒரே விஷயத்தை தான் நினைத்தேன்” என்றான் அந்த இளைஞன். உடனே சாக்ரடீஸ் “உனது ஒரே சிந்தனை தான் உன்னை விருப்பப்பட்ட செயலில் வெற்றி பெற வைக்கும். ஒரே சிந்தையுடன் வெற்றி பெறும் வரை உழைத்துக் கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம்” என்றார் சாக்ரடீஸ்.