வாட்ஸ்-அப்பிலிருந்து சாட் ஹிஸ்டிரியை மாற்றிக் கொள்ளும் வசதி..! அதிரடி காட்டிய டெலிகிராம்
சென்ற மாதம் வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட பிரைவசி பாலிஸி அப்டேட் மூலம் பெரும் பின்னடைவை சந்தித்தது. பயனாளர்களின் தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்படும் என அறிவித்த நிலையில், அதற்கு மாற்றாக சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றன. இந்திய மக்களில் பலர் டெலிகிராம் செயலியை தேர்வு செய்தனர்.. டெலிகிராம் தற்போது ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது பயனாளர்களின் சாட் ஹிஸ்டரியை வாட்ஸ்அப்பில் இருந்து அப்படியே டெலிகிராமிற்கு மாற்றிக் கொள்ள முடியும். தற்போது இந்த வாய்ப்பு ஆப்பிள் ஐபோன்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. தனி நபர் சாட், குரூப் சாட் என இரண்டையுமே வாட்ஸ்அப்லிருந்து மாற்றிக் கொள்ளலாம். இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என டெலிகிராம் தெரிவித்துள்ளது. இந்த புதிய அம்சத்தை முயற்சி செய்ய விரும்பும் பயனாளர்கள், ஆப் ஸ்டோரிலிருந்து சமீபத்திய அப்டேட்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.