2014ம் ஆண்டு, 9 சதவீதமாக இருந்த வைப்பு நிதி வட்டி பலன், 5.4 ஆக சரிந்தது. இது வைப்பு நிதி முதலீட்டை அதிகம் நாடும் மூத்த குடிமக்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அண்மையில் ரிசர்வ் வங்கி ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை நீண்ட காலத்திற்கு பின், 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. பொதுவாக கடனுக்கான வட்டி விகிதம் உயரும் போது வைப்பு நிதிக்கான வட்டியும் உயரும்.
பெரும்பாலான வங்கிகள் வைப்பு நிதிக்கான வட்டியை வரும் காலாண்டுகளில், 75 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தும். வைப்பு நிதி அளிக்கக் கூடிய பலன் 7 அல்லது 8 சதவீதமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது.
ஓராண்டு அடிப்படையில் முதலீடு செய்து, வட்டி விகிதம் உயர்ந்த பின், அந்த வட்டியில் மீண்டும் முதலீடு செய்து அதிக பலன் பெறலாம். குறுகிய கால கடன்சார் நிதிகளில் முதலீடு செய்து, பின்னர் வைப்பு நிதியில் முதலீடும் செய்யலாம்.
வட்டி விகித போக்கிற்கு ஏற்ப வைப்பு நிதி முதலீட்டை திட்டமிடுவது நல்ல பலன் தரும்.