கடன் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதித்த ரிசர்வ் வங்கி
மாநில கூட்டுறவு வங்கிகளும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும் நிதியை, கடன் பத்திரங்கள், விருப்ப பங்குகள் வாயிலாக திரட்டலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
எனினும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு கடன் வழங்கும்போது, அவை, அரசு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து திட்டங்களுக்கான உரிய அனுமதியை பெற்றுள்ளதா என உறுதி செய்த பின்னரே கடன் வழங்க வேண்டுமென, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
மேலும், நிறுவனத்தின் இயக்குனர்கள்,தலைவர், அவர்களின் உறவினர் என எவருக்கும், 5 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வழங்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.