இதுவும் வியாபார உக்தியாம்…
அத்தியாவசிய பொருட்கள் முதல்கொண்டு அனைத்து வகை பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் புகழ்பெற்ற மால் திருச்சியில் இயங்கி வருகிறது. இங்கு, 1000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூப்பன் வழங்கப்படுகிறது.
அக்கூப்பனை பயன்படுத்தி வீட்டு உபயோக பொருட்களை பெற்று கொள்ளலாம் என கூறப்படுகிறது. ஆனால், அக்கூப்பனில் உள்ள தொகைக்கு பொருட்கள் இருக்காது அதற்கு அதிகமானதாக தான் விலை இருக்கிறது. இலவசமாக கிடைத்த தொகையை விட்டு செல்ல மனமில்லாமல் மீண்டும் பணம் கொடுத்து அப்பொருளை வாங்கிச் செல்கின்றனர்.
புதிதாக துவங்கப்பட்டுள்ள வீட்டு உபயோக பிரிவில் மக்களின் பார்வை பட வேண்டும் வியாபாரம் நடைபெற வேண்டும் என இந்த யுக்தியினை கையாளுவதாக கூறுகின்றனர்.
இதுதான் உங்க வியாபார உக்தியா…?
திருச்சியில் மிகவும் பரபரப்பாகவும், விடிய விடிய மக்களின் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும் இடம் மத்திய பேருந்து நிலையம்.. தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இங்கு எங்கு திரும்பினாலும் டீ கடைகள் மற்றும் உணவகங்கள் தென்படும்.
திருச்சியில் எல்லா பகுதியிலும் கிளைகளை கொண்ட டீ கடை இங்கும் பஸ்ஸ்டாண்ட் மத்தியில் அமைந்துள்ளது. இக்கடையில் விடிய விடிய வியாபாரம் நடைபெறும். இக்கடை ஆரம்பித்த போது சுவை பிடித்து கூட்டம் கூடியது. தற்போது சமாளிக்க முடியாத அளவுக்கு வரும் கூட்டத்தை சமாளிக்க தரத்தை கைவிட்டு விட்டனர். வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்த பின் தரத்தை குறைப்பது டீ பிரியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் தருகிறது.