டாம்கோ மூலம் கடனுதவி திருச்சி கலெக்டர் அறிவிப்பு
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கான கடன் உதவி திட்டங்கள், தனிநபர் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி, ஆட்டோ கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது
திருச்சி மாவட்டத்திற்கு 2020-2021ம் ஆண்டுக்காக சிறுபான்மையினர் நல மக்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ரூ.4.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டாம்போ உதவித் திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற நகர்ப்புறம், கிராமப்புறங்களில் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு டாம்கோ கடன் திட்டம் 2ன் கீழ் பயன்பெற குடும்ப வருமானம் ரூ. 6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் மேற்படி கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம, திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதாக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மை சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்