வீடு தேடி வரும் வில்லங்கம் அலர்ட் செய்யும் திருச்சி காவல்துறை
ரோனா பரவல் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமாகி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஸ்மார்ட்போன் அத்தியாவசியத் தேவையாகி விட்டது.
ஸ்மார்ட்போனில் பிள்ளைகள் பாடம் படிப்பதாக நினைத்திருக்க, அவர்களோ ஸ்மார்ட்போன் வாயிலாக தவறான பாதையில் பயணம் செய்கிறார்கள் என்பதை பாதிக்கப்பட்ட பின்பே பெற்றோர்கள் அறிந்து கொள்கிறார்கள்.
இதனால் ஏற்படும் திசைமாறிய வாழ்க்கையும், தற்கொலைகளும் அதிகரிக்கின்றன. இதை தடுக்கும் நோக்கில் திருச்சி மாநகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவானது திருச்சி வாழ் மக்களுக்கு, என்னவிதமான வழிகளிளெல்லாம் ஸ்மார்ட்போன் வாயிலாக நம்மை ஏமாற்ற கிரிமினல் கூட்டம் காத்திருக்கிறது என்பதை விளக்கியிருக்கிறார்கள்.