கொப்பரைத் தேங்காய்க்கான கொள்முதல் விலை உயர்வு
2021-ம் ஆண்டில் சராசரி தரம் வாய்ந்த காய்ந்த கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.10,335 ஆகவும், முழு கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.10,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு, அகில இந்திய சராசரி உற்பத்தி செலவைவிட, காய்ந்த கொப்பரைக்கு 51.87 சதவீத வருவாயையும், முழு கொப்பரைக்கான வருவாயை, 55.76 சதவீதமும் உறுதி செய்யும் என கணக்கிடப்பட்டுள்ளது.