எஸ்.பி.ஐ. வங்கி சிறப்பு கடன் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள் குறைந்த வட்டியில் தனிநபர் கடன் பெறலாம். மேலும் இதற்கான செயல்பாட்டுக் கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடன் பெற 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கு நீங்கள் எஸ்.பி.ஐ.யின் யோனோ ஆப்பை (YONOAPP)பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.
2022 ஜனவரி 31ஆம் தேதிக்குள் கடன் பெறுபவர்களுக்கு மட்டுமே கடனுக்கான செயல்பாட்டுக் கட்டணம் ரத்து செய்யப்படும் என எஸ்.பி.ஐ. தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கடன் வழங்குவதற்கான முக்கிய தகுதியாக உங்களது கிரெடிட் ஸ்கோர் மட்டுமே. மற்றபடி உங்களது KYC சரியாக இருந்தால் உங்களுக்கு எளிதாக கடன் கிடைக்கும். இந்த தனிநபர் கடனுக்கு 9.60 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது.
நீங்கள் பெர்சனல் லோன் வாங்கு வதற்கு தகுதியுடையவரா என்பதை அறிய 567676 என்ற எண்ணிற்கு SMS அனுப்பினாலே போதும்.