பத்தே நாள்ல பணம் பார்க்கலாம்.. அரசு நிறுவனங்களுக்குப் பொருள்களை விற்க எஸ்.எம்.இ.-களுக்கு உதவும் ஜெம்
பத்தே நாள்ல பணம் பார்க்கலாம்.. அரசு நிறுவனங்களுக்குப் பொருள்களை
விற்க எஸ்.எம்.இ.களுக்கு உதவும் ஜெம்
‘‘எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களை நடத்தும் பலருக்கும் ‘ஜெம்’ போர்ட்டல் என ஒன்று இருப்பதே தெரிய வில்லை. 2016-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘ஜெம்’ போர்ட்டல், கடந்த 2021-&22-ல் ரூ.1.06 லட்சம் கோடி அளவுக்கு அரசு பொதுத்துறை நிறுவனங்கள் பொருள்களைக் கொள்முதல் செய்துள்ளன. இதில் 55% எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் பங்காக இருந்தாலும், இனிவரும் காலத்தில் இன்னும் அதிகமான அளவில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் ‘ஜெம்’ மூலம் பொருள்களை விற்க வேண்டும்.
பத்தே நாள்ல பணம்…
‘ஜெம்’ நிறுவனத்தின் மூலம் பொருள்களை விற்கும்போது கிடைக்கும் மிகப் பெரிய நன்மை, 10 நாள்களில் பணம் கிடைத்துவிடும் என்பதுதான். பணம் வாங்க மாதக் கணக்கில் அலையத் தேவை இல்லை. இப்படி பல சிறப்புகளைக்கொண்ட இந்த ‘ஜெம்’ போர்ட்டலைப் பயன்படுத்தி, நம்மூர் எம்.எஸ்.எம்.இ-கள் அதிகளவில் பயனடைய வேண்டும்.
குறைந்த கட்டணம்…
‘‘எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் ‘ஜெம்’-ல் போர்ட்டலில் தங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்து கொள்ள எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் ‘ஜெம்’ மூலம் அரசு நிறுவனங்களுக்கு பொருள்களை விற்க இதற்கு மிகக் குறைந்த கட்டணத்தைக் கட்டினால் போதும். இந்த நிறுவனத்தின் சேவையைத் தமிழகத்தில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் இன்னும் பெரிய அளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
‘ஜெம்’ போர்ட்டல்
எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்கள் பற்றி விவரங்களை போட்டோ வுடன் ‘ஜெம்’ போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும். இதே போல, அரசுப் பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்கு என்னென்ன பொருள்கள் தேவை என்பதை ‘ஜெம்’ போர்ட்டலில் சொல்லும். எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் எந்த நிறுவனம் பொருள்/சேவை வேண்டும் என்று சொல்கிறதோ, அந்த நிறுவனத்துக்கு விற்கலாம்.
ரிவர்ஸ் ஆக்ஷன்…
‘ஜெம்’ போர்ட்டலில் 47 லட்சம் பொருள்கள் விற்பனைக்கு வகைப்படுத்தப் பட்டுள்ளன. தவிர, 295 சேவைகளை யும் அரசுப் பொதுத்துறை நிறுவனங் களுக்குத் தரலாம். ரூ.25,000-க்குள் பொருள்/சேவைகளை நேரடி யாகவும், ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் மதிப்புவரையிலான பொருள்/சேவைகளை ‘ஜெம்’மில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களுடன் ஒப்பிட்டு வாங்கிக்கொள்ளலாம்.
ரூ.5 லட்சத்துக்குமேல் பொருள்/ சேவையை வாங்க வேண்டும் எனில், ஏலம் முறையில் கேட்க வேண்டும். ‘ரிவர்ஸ் ஆக்ஷன்’ முறையில் இந்த ஏலம் நடக்கும்.
இந்த ஏலம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். இதில் மனிதர்கள் யாரும் தலையிட முடியாது. விற்பவர், வாங்குபவர் ஆகிய இருவருக்கும் உகந்த ஆகச் சிறந்த விலை என்பது இதில் கிடைக்கும் என்பது முக்கியமான விஷயம். இந்த ஏலம் முடிந்து பொருள்க ளைத் தருவதற்கான ஆர்டர் உங்களுக்குக் கிடைத்துவிட்டால், நீங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குப் பொருள்களை அனுப்பலாம். இந்தப் பொருள்கள் சரியாக இருந்தால், அடுத்த சில தினங்களுக்குள் பொருள்களுக்கான பணம் உங்களுக்குக் கிடைக்கும். பொருள்களின் தரம் திருப்திகரமாக இல்லை எனில், திரும்ப அனுப்பப்படும்.
பொருள்கள் அனுப்பிய பின் அடுத்த ஒன்றிரண்டு வாரங்களுக்குள் பொருள்களின் தரம் பற்றி வாங்குபவர்கள் எதுவும் சொல்லவில்லை எனில், அந்தப் பொருள்களின் தரம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும். தமிழகத்தில் இருந்து பல ஆயிரம் கோடி அளவுக்கு எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் பொருள்களை விற்க முடியும்.