பிரியாணி சாப்பிட்டால் 2 நாள் டூர் இலவசம் ! தீபாவளி offer !
திருச்சி தஞ்சாவூர் சாலையில் பழைய பால்பண்ணை பகுதியில் உள்ளது ஹோட்டல் மார்விக். தங்குமிடம், திருமண மண்டபம், பார்ட்டி ஹால், உணவகம் என அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற இந்த ஹோட்டலின் அன்னவாசல் மெஸ் சார்பில் முதலாம் ஆண்டு தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்காக வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவித்துள்ளனர்.
இதன்படி தீபாவளி பண்டிகைக்காக சீரக சம்பா அரிசியில் சமைத்த மட்டன் பிரியாணி பெரிய பக்கெட் ரூ.2600, சிறிய பக்கெட் ரூ.1400, சிக்கன் பிரியாணி பெரிய பக்கெட் ரூ.1800, சிறிய பக்கெட் பிரியாணி ரூ.1000 எனவும் விலை நிர்ணயித்துள்ளனர்.
பிரியாணியுடன் தால்சா ஆனியன் பச்சடி மற்றும் பிரட் அல்வா வழங்கப்படுகிறது. முன்பதிவின் பேரில் ஆடர்கள் எடுக்கப்படுகிறது.
பிரியாணி வாங்கும் வாடிக்கையாளர்களில் 3 பேர் அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் எனவும் அதில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு குடும்பத்துடன் 2 நாள் தங்குமிடம் மற்றும் உணவுடன் கூடிய சுற்றுலா (மதுரை, திருநெல்வேலி), செல்லவும் இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு குடும்பத்துடன் 1நாள் முழுவதும் ஹோட்டல் மார்விக்கில் தங்கி மகிழலாம் என்றும் மூன்றாம் பரிசு வெல்பவர்கள் 1 நாள் இரவு உணவு (Dinner) அன்னவாசல் மெஸ்ஸில் குடும்பத்துடன் அருந்தி மகிழலாம் என்றும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் முன்பதிவிற்கு 73977 20856, 73977 20127 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.