முதலீடுக்கு உதவும் ‘அஸ்பா’
“பங்குச் சந்தைகளில் புதிய பங்கு வெளியீடுகளுக்கு (ஐ.பி.ஓ) மட்டும் ‘அஸ்பா’ (Application Supported by Blocked Amount) முறை பயன்படுத்தப்படுகிறது. நாம் ஒரு புதிய பங்கின் ஐ.பி.ஓ-வில் பங்குகளுக்காக விண்ணப்பம் செய்யும்போது, நமக்கு பங்குகள் கிடைக்கலாம் (அலாட்மென்ட்) அல்லது கிடைக்காமல் போகலாம். இது ஐ.பி.ஓ முடிந்தபின் ஓரிரு தினங்களில் முடிவு செய்யப்படும். இந்த இடைப்பட்ட நாள்களில் நமது விண்ணப்பத் தொகை எங்கே எப்படி இருக்கிறது என்பதை ‘அஸ்பா’ முறை நிர்வகிக்கிறது.
இந்த முறையின்படி, நமது விண்ணப்பத் தொகை நமது வங்கிக் கணக்கிலேயே இருக்கும். ஆனால், முடக்கி வைக்கப்படும். நமக்கு அலாட்மென்ட் கிடைத்தால், எந்த அளவுக்குக் கிடைக்கிறதோ, அந்த அளவுக்கு மட்டும் பணம் செலுத்தப்படும். இல்லையேல், பணம் முடக்கத்திலிருந்து விடுவிக்கப்படும்.