அதிக வருமானம் ஈட்ட அதிக ரிஸ்க் எடுக்க வேண்டுமா..?
மியூச்சுவல் பண்டின் எந்த ஒரு முதலீட்டுத் திட்டமும் வருமான உத்தர வாதத்துடன் வருவதில்லை. நிறுவனத்துக்கு உள்ளே மற்றும் நிறுவனங்களுக்கு வெளியே மற்றும் அரசு சார்ந்த ரிஸ்க்குகள் இருக்கின்றன. முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்யும் முன், சிறு முதலீட்டாளர்கள் அவர்களின் ரிஸ்க் எடுக்கும் திறனை அறிந்திருப்பது அவசியமாகும்.
AA தரக்குறியீடு மற்றும் அதற்கு மேற்பட்ட தரக்குறியீடு கொண்ட கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது ரிஸ்க்கைக் குறைக்கும் வழியாகும். விரும்பிய வருமானத்தைப் பெற இந்த வழியில் ரிஸ்க்கைக் குறைக்க முடியும். அதிக ரிஸ்க் எடுத்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நிலை யான வருமான திட்டங்களை ஒரு சொத்துப் பிரிவாகப் புரிந்துகொண்டு, தங்களுக்கு முன் இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு முதலீட்டாளர்களிடமும் உள்ளது.