Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பணவீக்கத்தைச் சமாளிக்க சில வழிமுறைகள்…

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பணவீக்கத்தைச் சமாளிக்க சில வழிமுறைகள்…

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

  • கிரெடிட் கார்டு, ஆட்டோபே போன்ற வசதிகள் வந்தபின் மாதாந்தர பில்கள் ஏறுவது நம் கவனத்துக்கு வருவதில்லை. ஆனால், மாதம்தோறும் அவற்றை பழைய பில்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை வழக்க மாகக் கொள்ள வேண்டும். அப்போதுதான் எங்கு, எவ்வளவு செலவு அதிகரித்துள்ளது, எவற்றை யெல்லாம் குறைக்க வேண் டும் என்ற தெளிவு கிடைக்கும்.
  •  பணவீக்கம் வரும்போது வட்டி விகித உயர்வும் கூடவே வரும். அதனால் நாம் கடன்களுக்கு கட்டும் வட்டியின் அளவு கூடும். நம் கடன்களில் எவையெவை ஃபிக்ஸட் ரேட், எவையெவை ஃப்ளோட்டிங் ரேட் என்று பார்த்து, ஃப்ளோட்டிங் ரேட் கடன்களை உடனடியாக ஃபிக்ஸட் ரேட் கடனாக மாற்றும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். அல்லது ஃப்ளோட்டிங் ரேட் கடன்களுக்கு சற்று அதிகமான பணம் செலுத்தி முன்கூட்டியே கடனை முடிக்கவும் முயற்சி செய்யலாம்.
  •  பணம் அவசரமாகத் தேவைப்படலாம் என்று கேஷாக அலமாரியிலோ, மெத்தைக்கடியிலோ வைத்திருந்தால், அதன் வாங்கும் திறன் கண்டிப்பாகக் குறையும். குறைந்த அளவு வருமானம் தந்தாலும் வங்கி எஸ்.பி அக்கவுன்ட்டுகள் பாதுகாப்பும் லிக்விடிட்டியும் உள்ளவை என்பதால், குறுகிய காலத்தில் தேவைப்படும் பணத்தை அவற்றில் போட்டு வைக்கலாம்.
  • குறுகிய காலத்தில் தேவைப்படாத பணத்தை, பணவீக்கம் தாண்டிய வருமானம் தரும் பங்குகள், பாண்டுகள், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்வது பணவீக்கத்தை எதிர் கொள்ளும் கேடயமாக உதவும்.
  •  பணவீக்கம் 5 சதவிகிதமாக இருக் கும் நிலையில், நம் வருமான உயர்வு வெறும் 3 சதவிகிதமாக இருந் தால், கண்டிப்பாக அது நம் எதிர்காலத்தைப் பாதிக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில், நம் வருமானத்தை உயர்த்தும் வழிகளைப் பற்றி நாம் அவசியம் சிந்திக்க வேண்டும்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.