KYC பெயரில் மோசடி.. எச்சரிக்கிறது ரிசர்வ் வங்கி..!
KYC (KNOW YOUR CUSTOMER) என்ற பெயரில் தற்போது அதிக அளவில் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. KYC விவரங்களைப் புதுப்பிப்பதாக கூறி வாடிக்கையாளர்களிடமிருந்து தகவல்களைப் பெற்று பணமோசடி நடப்பதாக ரிசர்வ் வங்கிக்கு பெருமளவில் புகார்கள் வரத் தொடங்கியுள்ளன.
வங்கி கணக்கு எண், இணையதள வங்கிச் சேவை விவரங்கள் கார்டு குறித்த தகவல்கள், பின் நம்பர், ஓடிபி உள்ளிட்ட எந்த தகவல்களையும் வாடிக்கையாளர்கள் போன் எஸ்எம்எஸ், இமெயில் உள்ளிட்ட எந்த வழியிலும் அடையாளம் தெரியாத மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள கூடாது.
வங்கி கணக்கு முடக்கப்படும் என கூறி இது போன்ற தகவல்களை மோசடிப் பேர்வழிகள் பெற்று பணத்தை திருடுவது அதிகமாகி வருகிறது . அதே போன்று, KYCபுதுப்பிப்பதற்காக வரும் இணைப்புகளை வாடிக்கையாளர்கள் தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்யக் கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது .