ஆன்லைன் வகுப்புகளில் தான் 2021—22 கல்வியாண்டையும் கடக்க நேரிடும் என்ற சூழலில் செல்போன் வாங்குவதை எளிதாக்கும் வகையில் முத்தூட் ஃபின் கார்ப் நிறுவனம் வித்யா தன் தங்க கடன் திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தங்க நகைக் கடன் முதல் 90 நாட்களுக்கு ரூ.10,000 வரையில் வட்டியில்லாமல் வழங்கப்படுகிறது. 91ஆவது நாளில் இருந்து வருடத்திற்கு 18% வட்டி என அறிவித்துள்ளது. இந்த கடன் வாங்க குழந்தையின் மாணவர் அடையாள அட்டை தேவை.
ஒரு குழந்தைக்கு ஓரு முறை மட்டுமே இந்த கடன் வழங்கப்படும். அதோடு இந்த கடனுக்கு செயலாக்க கட்டணம் கிடையாது. அதிலும் குறிப்பாக முதலில் வரும் 1 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் என முத்தூட் ஃபின் கார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது.