சூப்பர் வாய்ப்புகளை உருவாக்கும் ‘சுய பயிற்சி’ சூட்சுமங்கள்!
சூப்பர் வாய்ப்புகளை உருவாக்கும் ‘சுய பயிற்சி’ சூட்சுமங்கள்!
இன்றைக்கு நம்முடைய வேலை செல்பவரின் போக்கு கடந்த நூறு ஆண்டுகளில் வாழ்ந்த நம் மூதாதையர்களின் பணி வாழ்க்கையில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.
ஏனெனில், அன்றைய காலகட்டத்தில் பணி வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் செய்த சில விஷயங்களைக் கண்ணும் கருத்துமாகப் பின்பற்றினால், நிச்சயம் வெற்றி கண்டுவிட முடியும் என்கிற நிலை இருந்தது.
இன்றைக்கு, அது மாதிரி எல்லாம் செய்து முன்னேற்றம் கண்டுவிட முடியாது. ஏனெனில், நம்முடைய கேரியர் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் மிகச் சிக்கலான விஷயங்களாக மாறியுள்ளன. பயிற்சி என்பது பலவற்றையும் திறக்க உதவும் ஒரு சாவி என்பார்கள்.
உங்களுடைய திறனை வெளிக்கொணர உதவும், உங்களுக்குத் தேவையான வாய்ப்பு களை வெளிக்கொணர உதவும், நீங்கள் சிக்கி யிருக்கும் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு வெளியேறும் வழியைக் காட்ட உதவும் சாவி பயிற்சியே ஆகும்.
பயிற்சி அளிப்பது ஒரு கலை. இந்தக் கலையை அனைவருமே கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொண்டபின் நடைமுறைப்படுத்தவும் முடியும். உங்களைப் பற்றி நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும் கேள்விகளைக் கேட்டு அந்தக் கேள்விகளுக்கான பதிலைக் கொண்டு முன்னேற்றத்துக்குத் தேவையான நேர்மறை நடவடிக்கைகளை எடுப்பது என்பதைத் தான் உங்களுக்கு நீங்களே பயிற்சி அளித்துக்கொள்வது என்கிறோம்.
உங்களுக்கு நீங்களே பயிற்சியை வழங்கிக்கொள்வதற்கான திறன் என்பது நீங்கள் உங்களுடைய கரியரில் தற்போது அடைந்து இருக்கும் பதவியாலோ எத்தனை வருட அனுபவம் உங்களுக்கு உள்ளது என்பதில் இருந்தோ வருவதில்லை. உங்களுக்கு நீங்களே பயிற்சி அளித்துக் கொள்வதில் நீங்கள் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்கள் மற்றும் எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்கள் என்பதில் இருந்தே அது நிர்ணயிக்கப்படுகிறது.
பயிற்சி என்பது உங்களுக்குள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான விஷயம். இந்த மாற்றம் என்பது உங்களுடைய பதவி உயர்வாக இருக்கலாம்; உங்களுடைய மேலதிகாரியிடம் இருக்கும். மோசமான உறவைச் சீர்செய்து நல்லுறவைப் பேணுவதாக இருக்கலாம்; ஏன், நீங்கள் பார்க்கும் வேலையில் ஓர் அர்த்தத்தை காணுவதாகக்கூட இருக்கலாம்.
சுயநம்பிக்கையை வளர்க்கும்…
முன்னேற்றம் தொடர்ந்து தடைபடும்போது நம்முள்ளே ஒளிந்துகொண்டிருக்கும் சுயவிமர்சகர் நாமெல்லாம் இதற்கு லாயக்குப்பட மாட்டோம் என்கிற விமர்சனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக நம்முன்னே வைத்து வளர்த்தெடுப்பார். இந்தக் குரலை நாம் கேட்ட வுடனேயே நம்மிடம் இருக்கும் பாசிட்டிவ்வான விஷயங்களை எல்லாம் விட்டுவிட்டு, நெகட்டிவ்வான விஷயங்களைப் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்க ஆரம்பித்துவிடுவோம். இதைத் தவிர்க்க நம்முடைய மனநிலையை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும்.
இருவகைப் புரிந்துகொள்ளல்…
நம்மைப் பற்றிய சரியான சுய புரிதல்களைக் கொண்டிருத்தல், நம்மைப் பற்றி நாம் நம்முள்ளே இருந்தே சரிவர புரிந்துகொள்ளத் தேவையான முயற்சிகளை எடுத்தல் மற்றும் இவை குறித்த சரியான கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் திறன் என்பவையே அந்த மூன்று விஷயங்களாகும். இதில் நம்மைப் பற்றிய சுயபுரிதல் என்பதில் உட்புறப் புரிதல் மற்றும் வெளிப்புறப் புரிதல் என்ற இரண்டு உட்பிரிவுகள் உள்ளன.
உட்புறப் புரிதல் என்பது நம்முடைய பலம், பலகீனம், உணர்வுகள், ஆசைகள் மற்றும் நம்முடைய எண்ணம் மற்றும் உணர்வுகளை சரிவரப் புரிந்து கொள்வதாகும். வெளிப்புறப் புரிதல் என்பது நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மை எந்த மாதிரி
யாகப் பார்க்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்வதாகும்.
வைராக்கியத்துடன் போராடும் குணம், நோக்கத்தை அறிந்துகொள்வது, நேரத்தை மேலாண்மை செய்வது, நம்மீது நாமே அளவற்ற நம்பிக்கை கொள்வது, அலுவலகத்தில் உறவுமுறையை மேம்படுத்துவது, நம்முடைய பார்வையில் நமக்கேற்ற வளர்ச்சி என்ன என்பதைப் புரிந்துகொள்வது, பணி சார்ந்த விஷயங்களில் நம்முடைய நோக்கத்தை எப்படி அளவிடுவது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்.