Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் கேக் பிரியர்கள் கொண்டாடும் பிளாக் பாரஸ்ட்!

திருச்சியில் கேக் பிரியர்கள் கொண்டாடும் பிளாக் பாரஸ்ட்

ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்காலங்களில் மட்டுமே ‘கேக்’ என்ற தின்பண்டம் மக்கள் மனதில் வந்து செல்வதைத் தாண்டி தற்போது பிறந்த நாள் மட்டுமின்றி திருமண விசேஷங்களில் கேக் இல்லாமல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இல்லை என்று அளவிற்கு கேக் மீதான ஈர்ப்பு மக்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறது.

ஆங்கிலேயர்களின் உணவுப் பொருட்களில் ஒன்றான பிரட் மற்றும் கேக் இரண்டும் பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகே இந்தியாவில் அறிமுகமானது. பலதரப்பட்ட கேக்கிற்கு இடையில் இப்போது பெரும் வரவேற்பை பெற்றும் வரும் கேக் வகைகளில் முன்னணி வகிப்பது பிளாக் பாரஸ்ட் கேக்.

 

பிளாக்பாரஸ்ட் கேக் தோன்றிய வரலாறு
இந்த பிளாக் பாரஸ்ட் கேக்கிற்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறு உண்டு. பிளாக் பாரஸ்ட் கேக்கின் பூர்வீகம் ஜெர்மனி. ஜெர்மனியில் உள்ள செர்ரி மரங்கள் நிறைந்த பிளாக் பாரஸ்ட் என்ற சுற்றுலாத் தலத்தில் திருமணம் ஆனவர்கள், தங்கள் வாழ்க்கையும் செர்ரி பழங்களைப் போன்று இனிப்பாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து அங்கு ஒரு செர்ரி மரக்கன்றை நட்டு வைப்பார்கள்.

 

1915ல் ஜெர்மனியைச் சேர்ந்த ஜோசப் கெல்லர் என்பவர் தான் ஜெர்ரி பழங்களைக் கொண்டு ப்ளாக் பாரஸ்ட் செர்ரி என்ற கேக்கை தயாரித்தார். அதன் பின்னரே பல அடுக்குகளால் ஆன, அடுக்குகளுக்கு இடையில் க்ரீமும் செர்ரி பழங்களும், சாக்லேட் துருவல்களும் நிறைந்த ப்ளாக் பாரஸ்ட் கேக் பிரபலமடையத் தொடங்கியது.

ஆல்கஹால் சேர்க்கப்படுகிறதா?
பிராந்தி, ரம் மற்றும் ஆல்கஹால் பயன்படுத் தியும் ப்ளாக் பாரஸ்ட் கேக் தயாரிப்பார்கள். இந்தியாவில் தயாரிக்கப்படும் கேக்குகளில் ஆல்கஹால் சேர்ப்பதில்லை.
இத்தகைய சிறப்புமிக்க ‘ப்ளாக் பாரஸ்ட்’ கேக் தயாரிப்பில் சிறந்து விளங்கும் ‘ப்ளாக் பாரஸ்ட்’ பேக்கரி திருச்சி, தில்லைநகர் 1வது கிராஸ் மற்றும் அண்ணாமலை நகர் உள்ளிட்ட இரண்டு இடங்களில் செயல்படுகிறது. இதன் உரிமையாளர் பிரேம்குமார் நம்மிடம் கூறுகையில்,

திருமண நிகழ்ச்சியில் பிளாக்பாரஸ்ட்
திருச்சி மாநகரில் 2012ம் ஆண்டு ‘பிளாக் பாரஸ்ட்’ பேக்கரி திறந்தோம். பிற கேக் கடைகளைக் காட்டிலும் நமக்கென்று தனி அடையாளம் இருக்க வேண்டும் என நினைத்து அதன்படியே செயல்பட்டு வருகிறோம். திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் மணமக்கள் முதன்முதலில் தங்களுக்குள் இனிப்பை பரிமாறிக் கொள்ளவும், மணமக்களை மகிழ்விக்கவும் பலரும் எங்கள் பேக்கரியின் ‘ப்ளாக் பாரஸ்ட்’ கேக்கினை தவறாமல் வாங்கிச் செல்கின்றனர்.

வீடியோ லிங்:

திருச்சியில் பர்ஸ்ட் குவாலிட்டி கேக்
அது மட்டுமன்றி, திருச்சியில் முதன் முதலில் பிரஸ் கிரீம் கேக் என்ற கான்செப்டையே நாங்கள் தான் கொண்டு வந்தோம். அதேபோல், 20க்கும் மேற்பட்ட வெரைட்டிகளில் கேக்குளை செய்து கொடுக்கிறோம். இது எங்களின் தனிச்சிறப்புகளில் ஒன்று. குழந்தைகள், பெரியவர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் பைன் கேக், மல்டிகிரைன் கேக் உள்ளிட்ட கேக் வகைகளை திருச்சியில் 2015ம் ஆண்டில் அறிமுகம் செய்தோம். இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

அதேபோல், கிருஸ்துமஸ், நியூஇயர் என விழா நாட்களில் பிளம்கேக் செய்து தருகிறோம். 15 வகையான நட்ஸ் சேர்த்து தரமான மற்றும் சுவையான கேக்குகளை வழங்குவோம். இதற்காக 6 மாதம் முன்பே பணியை தொடங்கிவிடுவோம்.

 

ஒரு முறை எங்களிடம் பிளம் கேக் வாங்கியவர்கள், ஒவ்வொரு வருட விழாவிற்கும் எங்களை தவறவிடுவதில்லை. அதேபோல், ஆர்டரும் வருடாவருடம் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது. அதற்கு எங்களின் சுவையும் தரமுமே காரணம். வாடிக்கையாளர்கள் கேட்கும் கஸ்டமைஸ்டு கேக்குகளையும் செய்து கொடுக்கிறோம்.

திருச்சியிலேயே பர்ஸ்ட் குவாலிட்டி கேக்கை நாங்கள் தான் வழங்கி வருகிறோம். எந்த நேரத்திலும் தரத்தில் காம்ரமைஸ் செய்து விடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம்.

வீடியோ லிங்:

சைவ பிரியர்களுக்கு எக்லெஸ் கேக்
புரட்டாசி மற்றும் கார்த்திகை, மார்கழி மாதங்கள் (சபரிமலை யாத்திரை செல்லும் மாதங்கள்) இந்துக்களின் முக்கியப் பண்டிகை காலமாகும். அக்காலங்களில அசைவம் சாப்பிடமாட்டார்கள். அவர்களுக்கென பிரத்யேகமாக முட்டையில்லாத (EGG FREE) கேக்குகளை வாடிக்கையாளர்களுக்கு தயாரித்து வழங்கி வருகிறோம். தற்போது, முழுமையாக சைவ உணவு மட்டுமே உண்பவர்களும் எங்களிடம் முட்டையில்லா கேக்கினை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். மற்ற கேக்குகள் போலவே முட்டையில்லாத கேக்குகளும் எப்போது வந்தாலும் கடையில் கிடைக்கும்.

கேக்குகள் மட்டுமில்லாது, இதர பேக்கரி பொருட்களையும் சொந்த தயாரிப்பில் செய்து வழங்குகிறோம். அந்த வகையில் மக்கள் பெரும்பாலும் விரும்பி சாப்பிடும், பப்ஸ், வொண்டர் கேக், கப்கேக், பிரட்டு வகைகள் என அனைத்தும் செய்கிறோம்.

பிரசர்வேடிஸ் கலப்பா…?
குறிப்பாக, குழந்தைகளை கவரும் வண்ணம் 20 வகையான குக்கீஸ் செய்கிறோம். பேக்கரி பொருட்கள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க சிலர் பிரசர்வேடிவ்ஸ் என்று சொல்லப்படும் சில இராசயனப் பொருட்களை கலப்பார்கள். விற்பனையை கணித்து அதற்கு ஏற்ற அளவில் தயாரிப்பதால் உடனுக்குடன் விற்று தீர்வதாலும் நாங்கள் பிரசர்வேடிவ்ஸ் கலப்பதில்லை.

பிறந்தநாள் கொண்டாட இலவச இடம்
பர்த்டே பார்டிக்கு என்று கடையின் முன்பகுதியில் பிரத்யேகமான இடம் ஒதுக்கி வைத்துள்ளோம். 20 நபர்கள் வரையில் இங்கு பங்கேற்க முடியும். கல்லூரிகள் இருந்தால் இந்த இடம் எப்போதும் மாணவர்களுடனே காணப்படும். நாங்கள் இதற்கென்று தனி கட்டணம் வசூலிப்பது கிடையாது.
எங்களிடம் கேக் ஆர்டர் செய்தால் பிறந்த நாள் கொண்டாட இடம் இலவசமாக கொடுக்கிறோம். தற்போது, கொரோனா நேரம் என்பதால் அரசு வழிகாட்டுதலின் படியே நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்குகிறோம்.

கல்லூரி மாணவர்களுக்கு டிஸ்கவுண்ட்
அதேபோல், காலேஜ் ஸ்டூடன்ஸ், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களின் அடையாள அட்டையை காண்பித்தால் போதும் அவர்கள் ஆர்டர் செய்யும் கேக்குகளுக்கு 10% தள்ளுபடி வழங்குகிறோம். இந்த ஆப்பர் எப்போதும் நம்முடைய கடையில் இருக்கும்.
வாடிக்கையாளர்களின் மனநிறைவே எங்களின் நோக்கம், அதற்காகவே தனிக்கவனம் செலுத்தி மிகவும் சிரத்தையுடன் செயல்பட்டு வருகிறோம்” என்றார்.

தொடர்புக்கு: 95979 73370

Leave A Reply

Your email address will not be published.