நேர்மையான வியாபார அணுகுமுறையை தொடருவோம்… அல்மதினா டிம்பர்ஸ் இயக்குனர் முகம்மது ஹாரிஸ் உறுதி
திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் கடந்த 40 ஆண்டு காலமாக மர விற்பனையில் பெரும் பெயர்பெற்ற நிறுவனம் அல்மதினா டிம்பர்ஸ்.
ஹாஜி கமருதீன் அவர்களால் தொடங்கப்பட்டு அனைத்து விதமான இறக்குமதி செய்யப்பட்ட மரவகைகளும் கிடைக்கும் வகையில் தொடர்ந்த வியாபாரத்தாலும், நேர்மையான வியபார அணுகுமுறையால் வாடிக்கையாளர்கள் வட்டம் பெருகிறது.
நிறைந்த தரம், நியாமான விலை என்ற நோக்கோடு செயல்பட்டதால் வாடிக்கை யாளர்கள் மத்தியில் நன்மதிப்பு பெருகிறது.
தொடர்ந்து, அரியமங்கலம், ரெங்கநாதபுரம், கல்யாணராமன் தெரு பகுதியில் மர அறுவை மில், மேலும், வீடு கட்ட தேவையான Hardware Materials, பிவிசி பைப்ஸ், மைக்கா மற்றும் பிளைவுட்ஸ் வகைகள் விற்பனை செய்ய சவுத் இந்தியன் பிளைவுட்ஸ் நிறுவனம் என வெகுசீராக வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
அல்மதினா டிம்பர்ஸ் தற்போது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்காக, சங்கிலியாண்டபுரம் தண்ணீர் டேங்க் எதிரில் புதிய பிரம்மாண்டமான கிளை விற்பனை மையத்தை தொடங்கியுள்ளது. இதுகுறித்து, நிர்வாக இயக்குனர் முகம்மது ஹாரிஸ் கூறும்போது, மர விற்பனையில் கடந்த 40 ஆண்டு காலமாக இருந்து வருகிறோம். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அனைத்துவிதமான தரமான இறக்குமதி செய்யப்பட்ட மரவகைகளை தேவைக்குகேற்ப விற்பனை செய்து வருகிறோம்.
அதுமட்டுமின்றி தேக்கு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து மரங்களும் எங்களது நிறுவனத்தில் சலுகை விலையில் வழங்குகிறோம். நிறைவான தரம், நியாமான விலை என்ற தாரகமந்திரத்தோடு செயல்படுவதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று இந்த அளவுக்கு வளர்ந்துள்ளோம்.
வாடிக்கையாளர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம். இது நாள் வரை நாங்கள் கட்டிகாத்துவரும் நேர்மையான வியாபார அணுகுமுறையினை என்றும் தொடருவோம் என்று உறுதியாக தெரிவித்தார்.
அல்மதினா டிம்பர்ஸ் நிறுவனங்களை உரிமையாளர் ஹாஜி கமரூதீன் வழிகாட்டு தலின் படி இயக்குனர்கள் அப்துல்லா சேட், மற்றும் முகம்மது ஹாரிஸ் ஆகியோர் திறம்பட நிர்வகித்து வருகின்றனர்.