கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2021-ல் கொரோனா பரவலை அடுத்து விற்பனை குறைவாகவே. அதுமட்டுமின்றி; நடப்பு ஆண்டு ஏப்ரலை விடவும், மே மாதத்தில் ஓரளவு விற்பனை அதிகரித்தே உள்ளது. ‘மாருதி சுசூகி’யின் உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி; ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. ‘செமிகண்டக்டர் சிப்’ வினியோகத்தில் இருக்கும் சிக்கல்கள், மே மாத உற்பத்தியை பாதித்திருப்பதாக, டி.வி.எஸ்., உள்ளிட்ட சில நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை, கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது.மொத்தத்தில் பரவலாக மே மாத விற்பனை, அனைத்து நிறுவனங்களிலும் அதிகரித்திருப்பதை அறிய முடிகிறது. இவற்றில் ஹூண்டாய், ஹோண்டா, ஸ்கோடா, எம்.ஜி., மோட்டார், மகிந்திரா, அசோக் லேலண்டு, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, கியா இந்தியா டி.வி.எஸ்., மோட்டார் ஆகிய நிறுவனங்களும் அடக்கம்.