மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம், ஹைபிரிட் தொழில்நுட்பம் மற்றும் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட தானியங்கி ,சிஎன்ஜி-யில் இயக்கப்படும் மாடல் இவற்றுடன் மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பத்தில் புதிய மாடல் எா்டிகா, காரை சந்தையில் அறிமுகப்படுத்தியது.
பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்ற இந்த காரை புதிய தொழில்நுட்பத்தில் மேம்படுத்தி புதுப்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது அது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று அதன் இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஹிஷாசி டேக்யூச்சி கூறினார்.
மேலும், எா்டிகா காருக்கு வாடிக்கையாளா்களிடையே எப்போதும் வரவேற்பு உள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருளில் இயக்கும் வசதியுடன் வெளியவந்துள்ள புதிய எா்டிகாவில் 1.5 லிட்டா் பெட்ரோல் என்ஜினுடன் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோலில் லிட்டருக்கு 20.51 கி.மீ.யும், சிஎன்ஜியில் கிலோவுக்கு 26.11 கி.மீ.யும் மைலேஜ் கிடைக்கும்.
இதன் விலை மாடல்களுக்கு ஏற்ப, ரூ.8.35 லட்சம் முதல் ரூ.12.79 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார் அவா்.