உயில் எழுதவேண்டியதன் அவசியம்….
பாகப் பிரிவினை செய்ய விரும்பாதவர்கள் தங்கள் விருப்பத்தின்படி யாருக்கு என்ன சொத்து சென்று சேரவேண்டும் என்பதை உயிலாக எழுதி வைக்கலாம்.
இதற்கு நாம் முதலில் உயில் எழுதுவதன் அவசியத்தை உணர வேண்டும். நாம் நமக்காகவும், நம்முடைய சந்ததிகளுக்காகவும்தான் சொத்துகளைச் சேர்க்கிறோம். ஆனால் அவை நமக்குப் பின்பு நம்முடைய சந்ததியினருக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் சென்று சேர்வது அவசியம். அதற்காக எழுதுவதுதான் உயில்.
ஒருவர் உயில் எழுதாத பட்சத்தில் அவர் இறந்தபிறகு சொத்துகளைப் பகிர்ந்து கொள்வதில் குடும்ப உறவுகளுக்கிடையே பெரும் சண்டை உருவாகும். இது அவர்கள் வாழ்நாள் முழுவதும் துயரமாகவும் வாய்ப்புள்ளது. சொத்துகளுக்காக சண்டை போட்டு பலர் பல ஆண்டுகளாக வழக்கு நடத்தி வருகிறார்கள். இன்னும் சிலரோ, குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவிக்கிறார்கள். இதுபோன்ற சண்டை சச்சரவு துயரங்கள் ஏற்படாமல் தடுக்க உயில் எழுதுவது அவசியம். இதன் மூலம் குடும்ப உறவுகள் சீராக இருக்கக்கூடிய சூழ்நிலை அமையும்.